அன்னையரின் அன்பைப் பரப்பும் Fortune Cooking Oil

  Posted on   by   No comments

இலங்கையின் முதற்தர சமையல் எண்ணெயான Fortune சமையல்  எண்ணெய், “Senehe Ammage” (ஒரு அன்னையின் அன்பு) என்று தலைப்பில் விசேடமாகத் தொகுக்கப்பட்ட பாடல் ஒன்றை இன்று சினமன் கிரான்ட் ஹேட்டலில் இடம்பெற்ற விசேட வைபவம் ஒன்றில் வெளியிட்டு வைத்துள்ளது.

இந்நிகழ்வில் Pyramid Wilmar நிறுவனத்தின் www.pyramidwilmar.com(link is external) என்ற இணையத்தளமும் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிரோஷா விராஜினி, கசுன் கல்ஹார, ஷிஹான் மிஹிரங்க மற்றும் உமாரியா சிங்கவன்ச ஆகிய பிரபலமான பாடகர்களின் குரலில் வெளிவந்துள்ள இப்பாடல், அன்பிற்கெல்லாம் சிகரமாக, ஒரு குழந்தை மீது அன்னை வெளிப்படுத்தும் அன்பின் மகத்துவத்தை எடுத்தியம்புவதுடன், எவ்வாறு ஒரு அன்னை தனது குழந்தைக்கு மிகச் சிறந்தவற்றை வழங்குவதற்கு தன்னை வருத்தி உழைக்கிறார் என்பதையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

சர்வதேசரீதியாக தர அங்கீகாரம் பெற்றுள்ள சமையல் எண்ணெயான Fortune சமையல் எண்ணெய், இலங்கையில் Pyramid Wilmar (Pvt) Ltd நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

Lanka Market Research Bureau (LMRB) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின் பிரகாரம் நாட்டில் உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வர்த்தகநாமங்கள் மத்தியில் Fortune தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LMRB இன் வீட்டு தரவுத்திரட்டு சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுவதுடன், இதன் கீழ்  இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட, விரைவாக விற்றுத்தீரும் நுகர்வோர் உற்பத்தி வகைகளை வீடுகளில் கொள்வனவு செய்கின்ற விபரங்கள் தொடர்ச்சியாக மாதாந்த அடிப்படையில் திரட்டப்பட்டு வருகின்றது.

இந்தப் பாடலின் பின்னணி தொடர்பாக Pyramid Wilmar நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியான ஹிரான்ந் பெர்னாண்டோ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்

“தனது பிள்ளைகளுக்கு எப்போதும் மிகச் சிறந்தவற்றை வழங்கவேண்டும் என்பதே ஒவ்வொரு அன்னையினதும் விருப்பம். அவர்கள் தமது பிள்ளைகளை வளர்த்து, கல்வி புகட்டி, வழிகாட்டி அனைத்திலும் மிகச் சிறந்தவற்றை வழங்கிவருவதுடன், தமது பிள்ளைகள் தொடர்பாக தினசரி அக்கறை கொண்டவர்களாக உள்ளனர்.

அன்னையர் தமது குழந்தைகளுக்கு மிகச் சிறந்தவற்றைக் கொடுப்பதற்கும், எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சமையல் எண்ணைய் வகைகளை வழங்கவேண்டும் என்ற எமது நோக்கத்திற்கும் இடையிலே சிறந்த ஒற்றுமை உள்ளதை Pyramid Wilmar நிறுவனம் இனங்கண்டது.

ஆகவே இந்த இனிமையான பாடலுக்கு ஆதரவு வழங்கி, இசைத் துறையில் மிகவும் திறமைமிக்க பாடகர்கள் சிலரை இதற்காக ஒன்றுதிரட்டுவதற்கு நாம் தீர்மானித்தோம்” என்று குறிப்பிட்டார்.

அன்றாட உணவைப் பொறுத்தவரையில் அன்னையர் தமது பிள்ளைகளுக்கு எப்போதும் சீரான, ஆரோக்கியமான  மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளையே நிச்சயமாக கொடுக்க விரும்புவர் என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார். “அவர்கள் சமைப்பதற்கு பயன்படுத்துகின்ற முக்கியமான பொருட்களுள் ஒன்றாக எண்ணெய் காணப்படுவதுடன், Fortune சமையல் எண்ணெயின் மிகச் சிறந்த தரம், சுகாதார முறையில் பொதிசெய்யப்படுகின்றமை மற்றும் பணத்திற்கான உண்மையான பெறுமதியை வழங்குவதால் அவர்கள் Fortune சமையல் எண்ணெய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.”

Fortune சமையல் எண்ணெய் வகைகள் அனைத்தையும் மிகவும் நியாமான விலைகளில் வழங்கும் வகையில் அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

“அன்றாடம்  உபயோகிக்கின்ற உயர் தர உற்பத்தி ஒன்றின் விலை அதிகமாகக் காணப்படும் சந்தர்ப்பத்தில் நுகர்வோர்  இறுதியில் விலை அனுகூலத்தைக் கருத்தில் கொண்டு மலிவான, தரம் குறைவான மாற்று உற்பத்திகளை நாடுவது வழமை.

ஆனால் Fortune சமையல் எண்ணெயைப் பொறுத்தரையில் அவர்கள் மிகச் சிறந்த சமையல் எண்ணெயை நியாயமான  விலையில் பெற்றுக்கொள்வதால் அவர்களுக்கு மேற்கூறிய நிலைமை ஏற்படாது” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது Fortune சமையல் எண்ணெய் உற்பத்தி வரிசையில் மரக்கறி எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயா அவரை எண்ணெய் மற்றும் சோள எண்ணெய் ஆகிய உற்பத்திகள் அடங்கியுள்ளதுடன், ஒவ்வொருவரது தேவைகளுக்கும், வரவுசெலவுத் திட்டங்களும் ஏற்ப வேறுபட்ட பொதியிடல்  அளவுகளில் கிடைக்கப்பெறுகின்றன.

Fortune சமையல் எண்ணெய் உற்பத்திகளை இலங்கையில் உள்ள சில்லறைக்  கடைகள் மற்றும் சுப்பர்மார்க்கட்டுக்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

Fortune சமையல் எண்ணெய் வகைகள், ISO 22000, ISO 14001, ISO 9001, HACCP, FSSC 22000 மற்றும் SMETA உள்ளிட்ட பல சர்வதேச உணவுச் சுகாதார தர சான்று அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன.

இலங்கை மற்றும் மலேசியாவில் உள்ள நிறுவனத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்களிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய் வகைகளை உபயோகித்தே அனைத்து Fortune சமையல் எண்ணெய் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள நிறுவனத்திற்குச் சொந்தமான நவீன உற்பத்தி இயந்திரத்தொகுதி மற்றும் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதிகளை நிறுவனம் இயக்கி  வருவதுடன், இது இலங்கையிலேயே மிகவும் பாரிய அளவிலான சமையல் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையாகவும் காணப்படுவதுடன், உயர் பயிற்சிபெற்ற 350 இற்கும் மேற்பட்டவர்கள் இங்கே பணியாற்றி வருகின்றனர்.

ஆசியாவிலுள்ள மிகப் பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய வர்த்தகக் குழு நிறுவனமான Wilmar International Limited மற்றும் Pyramid Oil Mills (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு கூட்டு வியாபார முயற்சியே Pyramid Wilmar (Pvt) Ltd நிறுவனமாகும்.

1991 இல் ஸ்தாபிக்கப்பட்டு, சிங்கப்பூரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள Wilmar International நிறுவனம் சிங்கப்பூர்  பங்குச் சந்தையில் சந்தை முதலீட்டின் அடிப்படையில் நிரற்படுத்தப்பட்ட மிகப் பாரிய நிறுவனங்களுள் ஒன்றாக தற்போது திகழ்ந்து வருகின்றது.

பாம் எண்ணெய் பயிர்ச் செய்கை, எண்ணெய் விதை உடைப்பு, சமையல்  எண்ணெய் சுத்திகரிப்பு, சீனி ஆலை மற்றும் சுத்திகரிப்பு, சிறப்பு கொழுப்பு, இரசாயன எண்ணெய், இயற்கை டீசல், பசளை உற்பத்தி மற்றும் தானியப் பதப்படுத்தல் தொடர்பான வியாபாரத் தொழிற்பாடுகளை Wilmar நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. அது 450 இற்கும் மேற்பட்ட உற்பத்தி இயந்திரத் தொகுதிகளைக் கொண்டுள்ளதுடன், சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் மேலும் 50 இற்கும் மேற்பட்ட ஏனைய நாடுகள்  அடங்கலாக விசாலமான விநியோக வலையமைப்பொன்றைக் கொண்டுள்ளதுடன் 92,000 இற்கும் மேற்பட்ட  பல்தேசிய ஊழியர்களையும் பணியில் அமர்த்தியுள்ளது.

சமையல் எண்ணெய் மரங்களின் மற்றும் lauric  சமையல் எண்ணெய்களின் விற்பனை மற்றும் பதப்படுத்தல், பேக்கரி பட்டர் மற்றும் கொழுப்பு உற்பத்தி, விசேட கொழுப்பு மற்றும் மாஜரின் வகைகள், சிறு பொதி அளவிலான நுகர்வோர் சமையல் எண்ணெய் உற்பத்தி, மற்றும் சீனி வர்த்தகம் ஆகியவற்றில் Pyramid Wilmar வியாபாரச் செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.

Fortune சமையல் எண்ணெய் வகைகளுக்கு புறம்பாக, இலங்கையில் Masterline பேக்கரி உற்பத்திகளையும் Pyramid Wilmar சந்தைப்படுத்தி, விநியோகம்  செய்து வருகின்றது. மிக அதிகமான முதலீட்டுத் தொகையுடன், இரு பிரதான மூலோபாய அபிவிருத்திச் செயற்திட்டங்களான Shangri-La ஹோட்டல் நிர்மாணச் செயற்திட்டத்திலும் இது பங்குதாரராக உள்ளது.
மேலும்  Estate Management Services (Pvt) Ltd நிறுவனத்தின் கூட்டு உரிமையாக Sunshine Holdings  மற்றும் Tata Global Beverages ஆகிய நிறுவனங்களுடன் மற்றுமொரு மூலோபாயப் பங்குடமையை  Pyramid Wilmar நிறுவனம் அண்மையில் ஏற்படுத்தியுள்ளது. Sunshine Holdings நிறுவனமானது Watawala Plantations PLC மற்றும் Watawala TeaCeylon Ltd ஆகியவற்றின் தாய் நிறுவனமாகும்.

Categories: Media Center